Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் போட்டியிட்ட 49 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,786 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் உதயகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செல்வகுமார், சுயேச்சை வேட்பாளர்கள் அருண்குமார், சங்கர்கணேஷ், சிவகுமார் ஆகிய 5 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.
கடையநல்லூர் தொகுதியில் நோட்டாவுக்கு 1,056 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் போட்டியிட்ட புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் ராஜாராம், சுயேச்சை வேட்பாளர்கள் எம்.அய்யாதுரை, ஆர்.அய்யாதுரை, ஆவணிராஜா, ராதாகிருஷ்ணன், ராஜா பொன்னுசாமி, கணேசன்,கிருஷ்ணன், சங்கர், சிவசுப்பிரமணியன், சீனிவாசன், பூலோகராஜா, மாரிதுரை பாண்டியன், முருகானந்தம், ராஜி, வேலம்மாள் ஆகிய16 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் நோட்டாவுக்கு 1,955 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் வேட்பாளர் சுப்பிரமணியன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வேட்பாளர் பன்னீர்செல்வம், பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் பாலமுருகேசன், எனது இந்தியா கட்சி வேட்பாளர் மதன்குமார், சுயேச்சை வேட்பாளர்கள் கணேசன், கருத்தபாண்டியன், குருராஜ், முத்துகுட்டி, வேலம்மாள், வெற்றிமாறன் ஆகிய 10 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.
தென்காசி தொகுதியில் நோட்டாவுக்கு 1,159 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் போட்டியிட்ட அண்ணா திராவிடர் கழக வேட்பாளர் உதயகுமார், புதிய தமிழகம் வேட்பாளர் சந்திரசேகர், அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் சுரேஷ்குமார், நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் செல்வகுமார், எனது இந்தியா கட்சி வேட்பாளர் முகுந்தன், அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளர் ஜெகநாதன், சுயேச்சை வேட்பாளர்கள் ஆரோக்கிய பிரபு, கருப்பசாமி, பழனிகுமார், பழனிமுருகன், ரமேஷ், ரீகன்குமார் ஆகிய 12 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் மாடசாமி நோட்டாவை விட கூடுதலான வாக்குகள் பெற்றார்.
தென்காசி தொகுதியில் 2,576 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் செல்லாத வாக்குகள் ஏதும் இல்லை. 1,609 தபால் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் பழனிக்கு கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 674 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வெறும் 390 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு தபால் வாக்குகளே கை கொடுத்துள்ளது.
வாசுதேவநல்லூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2,171 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன், எனது இந்தியா கட்சி வேட்பாளர் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சின்னசாமி, தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் ஜெயகுமார், சுயேச்சை வேட்பா ளர்கள் முத்துபாண்டி, ராமமூர்த்தி ஆகிய 6 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.
5 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 49 பேர் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT