Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக் கான தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜியும் போட்டி யிட்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங் கிரஸ் வேட்பாளர் பேங்க் சுப்பிர மணியத்தைவிட கடைசி சுற்றில் 441 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்று, போக்குவரத்துத் துறை அமைச்சரானார்.
இந்நிலையில், தற்போதைய தேர்தலில் அமைச்சரும், முன்னாள் அமைச்சரும் நேரடியாக போட்டியிட்டதுடன், தமிழகத்தி லேயே அதிக எண்ணிக்கையாக 77 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்பதால், மாநில அளவில் கவனம் ஈர்த்த தொகுதி யாக கரூர் இருந்தது.
இதையடுத்து, இருவரும் தெருவுக்கு தெரு தேர்தல் பணிமனைகளை அமைத்து, கட்சியினரை திரட்டி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இருவரிடையே கடும் போட்டி நிலவியது. தமி ழக அளவில் கரூர் தொகுதியில் இருந்துதான் அதிகளவிலான புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு சென்றன.
இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கிய போது, கரூர் தொகுதியில் முதல் சுற்றில் செந்தில்பாலாஜியைவிட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 478 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். 2-வது சுற்றில் எம்.ஆர்.விஜயபாஸ்கரைவிட செந்தில்பாலாஜி 379 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். 3-வது சுற் றில் 52 வாக்குகளும், 4-வது சுற் றில் 227 வாக்குகளும் செந்தில் பாலாஜியைவிட எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூடுதலா கப் பெற்றார். ஆனால், அதன்பின் 5-வது சுற்று தொடங்கி தொடர்ந்து 18-வது சுற்று வரை தொடர்ந்து செந்தில்பாலாஜி முன்னிலை பெற்று, இறுதியில் விஜயபாஸ்கரைவிட 12,448 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற் றார். கிராமப்புற பகுதிகளில் பதி வான வாக்குகள் எண்ணப்பட்ட 1, 3, 4-வது சுற்றுகளில் மட்டும் செந்தில்பாலாஜியைவிட கூடுத லாக வாக்குகளைப் பெற்ற விஜயபாஸ்கர், அதற்குப் பிறகு நகர பகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெறவில்லை. எனவே, கரூர் தொகுதியில் நகரப்பகுதி கை கொடுக்காததால், விஜயபாஸ்க ரால் வெற்றி பெற முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT