Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM
சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமார்15 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதியுடன் முடிந்துவிட்டது.
கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 10 மாதங்கள் ஆகிவிட்டதால் உடனடியாக கூலிஉயர்வுவழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த 12-ம் தேதி முதல்வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர்குமரன்முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச்செயலாளர் வேல்முருகன், சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ரத்னவேல், செயலாளர் லெட்சுமி, பொருளாளர் மாணிக்கம்,விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் மாஸ்டர் வீவர்ஸ் சங்க தலைவர் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன், செயலாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில்பேசும்போது, “நூல் விலை உயர்வு,கரோனா தொற்று போன்றவற்றால் ஜவுளிஉற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியான ஜவுளிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கூலியை உயர்த்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 10 மாதங்கள் ஆகிவிட்டதால் மீண்டும்தாமதிக்காமல் கூலி உயர்வு வழங்க தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மீண்டும் கலந்து பேசி, 7-ம் தேதி பதில் சொல்வதாகஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கூலி உயர்வு வழங்கநடவடிக்கை எடுக்கக் கோரி வருகிற 6-ம்தேதி சங்கரன்கோவிலில் சாலை மறியல்போராட்டம் நடத்த தொழிலாளர்கள் தரப்பில் முடிவு செய்துள்ளதாக சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT