Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

இன்று உலக கால்நடை மருத்துவ தினம் - விலங்குகள் நலன் மூலமே மனிதர்கள் நலனை பாதுகாக்க முடியும் :

கொட்டாம்பட்டி சாணிப்பட்டி ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பாலில் புருசெல்லா நோய் கண்டறியும் ஆய்வை மேற்கொள்ளும் கால்நடை மருத்துவர்கள்.

மதுரை

விலங்குகள் மற்றும் பறவைகளின் நலன் காக்கும் கால்நடை மருத்துவப் பணியாளர்களின் உன்னத சேவையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

கால்நடைகள், பறவைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்களைத் தடுப்பதில் கால் நடை மருத்துவத் துறையினரின் பங்கு முக்கியமானது.

இதுகுறித்து மதுரை கால்நடை பராமரிப்புத் துறை நோய் புல னாய்வு பிரிவு டாக்டர் எம்.எஸ் சரவணன் கூறியதாவது:

மனிதர்களைத் தாக்கிவரும் 10 நோய்களில் 6 நோய்கள் விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் பரவுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மற்றும் ரேபிஸ் நோய் போன்ற நோய்கள் சில உதாரணங்கள் ஆகும்.

கரோனாவும் பறவைகள், விலங்குகள் மூலமே மனித னுக்குப் பரவியதாக ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகளில் இருந்து மனிதர் களுக்கும், மனிதர்களில் இருந்து விலங்குகளுக்கும் பரவும் நோய்களை ஜூனாடிக் நோய்கள் என அழைக்கிறோம்.

கால்நடை மருத்துவர்கள் தங்கள் தினசரிப் பணியில் கையாளும் 500 வகையான ஜூனாடிக் நோய்களில் 300 வைரஸ் நோய்களாகும். இந்த ஜூனாடிக் நோய்களைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் கால்நடை மருத்துவர்களின் அன்றாடப் பணியாகும்.

உலகில் மனிதர்களுக்கு முதன்முதலில் கண்டுபிடித்தது பெரிய அம்மை தடுப்பூசி. பசு மாடுகளின் மடியில் ஏற்படும் மடி அம்மை நோய், பால் கறக்கும் கறவையாளர்களின் கைகளில் பரவுவது கண்டறியப்பட்டு கால் நடை மருத்துவர்கள் மூலம் முதல் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு பெரிய அம்மை நோய் தடுப்பூசி மாட்டின் அம்மை நோய்க் கிருமி மூலம் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டது. மாடுகளைத் தாக்கும் கால் மற்றும் வாய் நோய்களைக் கண்டறிந்து தடுப்பூசி பணி மேற்கொள்வது கால்நடை மருத்துவர்களின் பணி. ரிகாம்பினன்ட் சப்யூனிட் தடுப்பூசி தயாரிப்பின் உதவியால் மனிதர்களுக்கும் பயன்படும் பல் வேறு நவீனரக தடுப்பூசிகள் தயாரிப்பில் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

மாடுகளுக்கு ஏற்படும் டிபி. நோயைத் தடுக்கும் நுட்பமே மனிதர்களுக்கும் டிபியை தடுப்பதில் முன் உதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது.

கோழிகளுக்கு ஏற்படும் மேரக்ஸ் நோய்க்கான தடுப்பூசி தொழில்நுட்பமே, மனிதர்களுக் கும் ஏற்படும் டி செல்லிம் போமா நோய் தடுப்பு முறைக்கு முன்னுதாரணம்.

பன்றிக் காய்ச்சல் தடுப்பு தொழில்நுட்பம் உலகின் முதல் மனித தடுப்பூசிப் பணிக்கு முன்னோடியாகும்.

பன்றிப் பண்ணைகளில் பர விய இன்புளுயன்சா நோய் மற்றும் நிபா வைரஸ் நோய்க்கு கால்நடை மருத்துவர்களின் தடுப்பு உத்தியை மனிதனுக்கு இந்நோய் தாக்கியபோது முன்னோடியாகப் பயன்படுத்தப்பட்டது.

ரேபிஸ் நோயைத் தடுப்பதில் இம்மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு உள்ள பல்வேறு நோய் களைப் பிராணிகள் வதைக் கூடத்தில் கண்டறிந்து அவை மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கும் பணிகளை கால்நடை மருத்துவர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x