Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் கே.ராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சங்கத்தின் தற்காலிக தலைவராக சங்க முன்னாள் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் மகன் எஸ்.ரத்தினகுமார் நியமிக்கப்படுகிறார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தலைவர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் 6 மாதத்திற்குள் நியமிக்கப்படுவர் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க சட்ட ஆலோசகர் ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராசு, துணைச் செயலாளர் என்.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT