Published : 23 Apr 2021 03:16 AM
Last Updated : 23 Apr 2021 03:16 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க - தி.மலை மாவட்டத்தில் : 1,470 படுக்கைகள் தயார் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,470 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்து தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகளும், 11 அரசு மருத்துவ மனைகளில் 410 படுக்கை வசதிகளும், ஒரு தனியார் மருத்துவ மனையில் 150 படுக்கை வசதி களும், 2 கரோனா சிகிச்சை மையங்களில் 560 படுக்கை வசதிகளும் என மொத்தம் 15 இடங்களில் 1,470 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கரோனா தொடர்பான சந்தேகங் கள் மற்றும் புகார்களுக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 04175–1077, 04175–233344, 04175–233345 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் 8870700800 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x