Published : 20 Apr 2021 03:16 AM
Last Updated : 20 Apr 2021 03:16 AM

கரோனா பரவல் இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் - நாட்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்

நாட்றாம்பள்ளி பாலிடெக்னிக் கல்லூரியில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் சிவன் அருள். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யா பாண்டியன், சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளியில் சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளி களுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி 50 முதல் 90 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 59 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 8,455 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில், கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கூடுதல் சிகிச்சை மையங்களை திறக்கவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சுகாதாரத்துறையினருக்கு உத்தர விட்டிருந்தார்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஆண்டு சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் திருப்பத்தூர் மட்டு மின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் இயற்கை முறைப்படி, பாரம்பரிய மிக்க உணவு வகைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், சுக்குமல்லி தேநீர், இஞ்சிச்சாறு, ஆடாதொடை குடிநீர், அதிமதுர கசாயம், நாட்டுக்கோழி சூப், கற்பூரவல்லி ரசம் உள்ளிட்டவைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கடந்த முறை 150 நாட்கள் செயல்பட்ட இந்த மையத்தில் 625 பேர் அனுமதிக்கப்பட்டு 5 நாளில் குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மீண்டும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், நாட்றாம்பள்ளியில் மீண்டும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, ஆட்சியர் சிவன் அருள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதற்கான சிகிச்சை கட்டமைப்புகள் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் முன்களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேபோல, நாட்றாம்பள்ளி பாலி டெக்னிக் கல்லூரியில் பெண்கள் தங்கும் விடுதியில் 52 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் இன்று (நேற்று) திறக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப் பட்டு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சித்த மருத்துவர்கள் வி.விக்ரம்குமார், டி.பாஸ்கரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.

இந்த மையத்திலேயே சித்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு அவை கரோனா நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே பாரம்பரியமிக்க உணவு வகைகள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குடிநீர், கபசுர குடிநீர், மூலிகை கசாயம் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் சிறப்பாக செயல்படவும், இங்கு அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை சித்த மருத்துவ குழுவினர் மேற் கொண்டு வருகின்றனர்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பாஸ்கரன், தீபா, செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x