Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM
திருநெல்வேலி/நாகர்கோவில்/ தூத்துக்குடி/தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 269 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 155 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 114 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 13, மானூர்- 9, நாங்குநேரி- 4, பாளையங்கோட்டை- 30, பாப்பாக்குடி- 2, ராதாபுரம்- 2, வள்ளியூர்- 34, சேரன்மகாதேவி- 5, களக்காடு- 15. தற்போது 1,513 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காவலர்களுக்கு முகக்கவசம்
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் அன்பு உத்தரவின்பேரில் சீருடைகள், முகக்கவசம் உள்ளிட்டவற்றை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சீனிவாசன் வழங்கினார். இதுபோல் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் நிலையம் முன் போக்குவரத்து காவலர்களுக்கு கையுறை, சானிடைஸர், முகக்கவசம் ஆகியவற்றை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து, குற்றம்) மகேஸ்குமார் வழங்கினார்.
குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை 24 மணி நேரத்தில் 172 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 2 பேருக்கு மேல் உயிர் இழப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து இ பாஸ் இன்றியும், கரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமலும் வருவோர் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12 சாலைகள் மூடல்
அதன்படி போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் 12 குறுக்குச் சாலைகள் மற்றும் சிறிய சாலைகளை தற்காலிகமாக மூடி, போக்குவரத்தை தடை செய்தனர். களியக்காவிளை பகுதியில் உள்ள குளப்புரம் கடுவாக்குழி சாலை, மார்க்கெட் சாலை, பனங்காலை சாலை, வன்னியகோடு சாலை ஆகியவை மூடப்பட்டன.
இதுபோல் பளுகல் பகுதியில் மலையடி சாலை, தேவிகோடு ராமவர்மன்சிறை சாலை, உண்டன்கோடு சாலை, அருமனை பகுதிக்குட்பட்ட புலியூர்சாலை, மாங்கோடு யமுனா தியேட்டர் சாலை, கொல்லங்கோடு பகுதிக்குட்பட்ட கச்சேரி நடை, பாத்திமாபுரம், புன்னமூட்டுக்கடை ஆகிய சாலைகளை மறு உத்தரவு வரும் வரை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கோவில்பட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT