Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 45,308 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் ஆட்சியர் கூறினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கிவைத்தார். அவர் கூறியதாவது:
சிறப்பு முகாம்கள்
தென்காசி மாவட்டம் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரக மற்றும் நகராட்சி பகுதிகளிலும், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முன்பு நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தற்போது 1,200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணி நடக்கிறது. வாகனங்களில் வரும் அனைத்து பொதுமக்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் வெளியூர் பயணிகள் கண்டறியப்பட்டால் கரோனா பரிசோ தனைக்கு உட்படுத்தப்படு கின்றனர்.
45,000 பேருக்கு தடுப்பூசி
தயார் நிலையில் படுக்கை வசதி
தென்காசி அரசு மருத்துவ மனை யில் 100 படுக்கை வசதி, புளியங்குடி அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 35 படுக்கை வசதி, கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, நல்லமணி யாதவா கல்லூரி, பராசக்தி மகளிர் கல்லூரி, சங்கரன்கோவில் மகாத்மா வேல்ஸ் வித்யாலயாவில் கரோனா பராமரிப்பு மையங்களுக்காக மொத்தம் 550 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தென்காசி அரசு மருத்துவமனை யில் தொடர்ந்து தடையில்லா ஆக்ஸிஐன் வழங்குவதற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங் களில் ஆய்வகத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சங்கரன்கோவிலில் பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு முன்னே ற்பாடு பணி நடைபெற்று வருகிறது.
தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளத்தில் தலா 2 பகுதிகளிலும், சங்கரன்கோவிலில் ஒரு இடம் என 7 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு பகுதி களாக கண்டறியப்பட்டு, தடுப்பு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, இயற்கை யோகா மருத்து வர் மேனகா, மருத்துவர் செல்வ கணேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT