Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

போலீஸார், வங்கி மேலாளர், தொழிலாளர்கள் உட்பட - நெல்லையில் 174, குமரியில் 92 பேருக்கு கரோனா : நாகர்கோவிலில் அரசு வங்கி, நூற்பு ஆலை, ேஹாட்டல் மூடல்

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பாதுகாக்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கரோனா பரிசோதனை நேற்று நடைபெற்றது. (வலது) நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி/ தென்காசி/ நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23 நூற்பு ஆலைதொழிலாளர்கள், வங்கி மேலாளர் உட்பட நேற்று ஒரேநாளில் 92 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆரல்வாய்மொழி், களியக்கா விளை சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து இ பாஸ் இல்லாமல் வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 92 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். நாகர்கோவில் செட்டிகுளத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் வடமாநில தொழிலாளிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் நகராட்சி ஊழியர்கள் ஹோட்டலில் கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் தூவியும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். ஹோட்டல் மூடப்பட்டது.

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள நூற்பு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மொத்தம் 23 தொழி லாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆலை மூடப்பட்டது. தொற்று கண்டறியப்பட்ட தொழி லாளர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதை யடுத்து நேற்று அந்த வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. வங்கி ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் கரோனா தடுப்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று புதிதாக 174 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 17, மானூர்- 5, நாங்குநேரி- 7, பாளையங்கோட்டை- 12, ராதாபுரம்- 2, வள்ளியூர்- 29, சேரன்மகாதேவி- 4, களக்காடு- 5. தற்போது மாவட்டத்தில் மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் 1,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை பிரிவில் 6 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலியிலுள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் உதவி கமாண்டன்ட் முகமது பயாஸ் தலையில் 92 மத்திய பாதுகாப்பு படையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அன்பு உத்தரவின்பேரில் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x