Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM
கரோனா தொற்றின் 2 வது அலை பரவிவருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது சரியாக நடைபெறுகிறதா என்று மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் திருமண மண்டபங்கள், மால், வணிக நிறுவனங்கள், திரையரங்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை 5,733 பேருக்கும்,சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் 145 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.10 லட்சத்து 64 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம்வரை முகக்கவசம் அணியாத 4,062 பேரிடம் ரூ. 8,12,400 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத 76 வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 38 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 1,202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றொதவர்கள் மீது 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT