Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களுக்கு விடுமுறை :

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வரும் 25 மற்றும் மே 1-ம் தேதியன்று டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களை மூட வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விடப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘டாஸ்மாக் மதுபான கடைகள், அதையொட்டி அமைந்துள்ள பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் செயல் படும் பார்கள் அனைத்தும் வரும் 25-ம் தேதி (மகாவீர் ஜெயந்தி) மற்றும் மே 1-ம் தேதி (மே தினம்) மூடியிருக்க வேண்டும். உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றால் உரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் பார்களுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x