Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் - தற்காலிக ‘லிப்ட் ’ அமைக்கும் பணி தீவிரம் :

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக லிப்ட் அமைக்கும் பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார். 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை ஆகியவற்றை ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக கொண்டுவரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 3, 4-ம் தளங்களில் உள்ள அறைகளுக்கு கொண்டு செல்வதற்காக தற்காலிக லிப்ட் வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதனை ஆய்வு செய்த ஆட்சியர் மெகராஜ், இப்பணியை தரமாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சக்தி கணேசன், திருச்செங்கோடு தேர்தல் நடத்தும் அலுவலர் ப.மணிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x