Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM
பிரதான குடிநீர் குழாய்களில் சமூக விரோதிகள் அடைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால், குழாய்கள் பழுதடைந்து வருகின்றன, என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில், 9-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்யைன், கோபி நகராட்சிப் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
கோபி நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், குடிநீர் திட்டபணிகளுக்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள், அவர்களது மாநிலங்களுக்கு திரும்பச் சென்று விட்டனர். இதனால், குடிநீர் திட்டத்தை உரிய காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது போர்க்கால அடிப்படையில், குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரதான குடிநீர் குழாய்களில் சமூக விரோதிகள் அடைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால், குழாய்கள் பழுதடைந்து வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது அடைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு, அதனை அகற்றும் பணிக்காக சென்னையிலிருந்து குழுவினர் வந்துள்ளனர். இன்று (நேற்று) இரவுக்குள் குழாய் அடைப்புகள் அகற்றப்பட்டு, தண்ணீர் விநியோகம் சீர் செய்யப்படும். அதன் பின்னர் சாலைகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT