Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலையொட்டி தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள், கட்டுமான நிறுவ னங்கள் விடுமுறை அளிக்க வேண் டும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதாரம்-1 இணை இயக்குநர் முகம்மதுகனி, இணை இயக்குநர்-2 வினோத்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டிட மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தேர்தல் விடுமுறை குறித்த புகார்கள் ஏதும் இருந்தால், அது தொடர்பாக 0416-2254953 மற்றும் 0416-2254575 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்தவித புகார்களுக்கும் இடம் கொடுக்காமல் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT