Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

அதிமுகவை ஆதரித்தால் நலத்திட்டங்கள் வந்தடையும் - 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்களிடம் முருகுமாறன் பிரச்சாரம் :

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களிடையே வாக்கு சேகரிக்கும் காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் முருகுமாறன்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் நேற்று தொகுதிக் குட்பட்ட பூவிழந்தநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, செட்டித்தாங்கல், கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், ரெட்டியூர், அருண்மொழித்தேவன், கீழ்புளியம்பட்டு, ஆச்சாள்புரம், சிறுகாட்டூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரிக்க அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கேச் சென்று தமிழக அரசின் சாதனைகள் குறித்தும், அரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அதிமுகவை ஆதரித்தால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தங்களை வந்தடையும். தொகுதிமேம்பாட்டிற்கும் பல்வேறுதிட்டங்களை முன்வைத்திருக்கிறோம் என்று வாக்குறுதி அளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு செய்துள்ள திட்டங்களை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஒன்றிய செயலாளர் சிவகுமார்,பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், பாஜக நிர்வாகிகள் சுப்ரமணியன், லோகு மற்றும் அதிமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x