Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

வாக்குச் சாவடிகளுக்கு சக்கர நாற்காலிகள் :

பாளையங்கோட்டையில் உள்ள காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்படுவதை ஆட்சியர் வே.விஷ்ணு ஆய்வு செய்தார். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 259 மடக்கு சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள காதுகேளாதோர் மேல் நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக 259 வாக்குச்சாவடி மையங்களுக்கு தலா ஒரு மடக்கு சக்கர நாற்காலி அனுப்பி வைக்கப்படுகிறது. வரும் 3-ம் தேதிக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிவுபெறும்.

மேலும் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாயில் மற்றும் வாக்குச்சாவடி அறையின் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் அமர்ந்து எளிதில் வாக்களிக்கும் வகையில் போதுமான இடத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிறுவுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைவான உயரத்திலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வாக்களி ப்பது தொடர்பாக உதவி பெற 7598000251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

ஆலோசனை கூட்டம்

வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் காவலர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் வே.விஷ்ணு, மாவட்ட தேர்தல் பொது காவல் பார்வையாளர் சுதன் சுகுமார் தலைமை வகித்தனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் பங்கேற்றனர்.

ரூ.71 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள் இல்லாததால் இதுவரை ரூ.71,02,085 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல 251 வேட்டிகள், 3 துண்டுகள், 5 பை கவரிங் நகைகள், 10.7 கி.கி. வெள்ளி, 70 பாட்டில் சமையல் எண்ணெய், 3500 கி.கி. அரிசி, 40 கி.கி. துவரம் பருப்பு, 590 பம்பரம், 66 பழைய கைபேசிகள் மற்றும் 58 பேட்டரிகள், 530 பிரச்சார புத்தகங்கள், 63 புதிய கைபேசிகள் மற்றும் 165 உறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை ரூ.22,34,268 மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 1950 என்ற சேவை எண்ணில் இதுவரை 1789 தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x