Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் மூலம் 6,083 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் குறித்த விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டி 6,523 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 6,083 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, வாக்காளர் பட்டியலில் இருந்து 1,634 பேர் நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் 1,656 பேர் பெயர் சேர்க்க விண் ணப்பித்தனர். அதில், 1,578 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் தொகுதியில் 1,873 பேர் பெயர் சேர்க்க விண்ணப் பித்தனர். அதில், 1,735 பேர் சேர்க்கப் பட்டுள்ளனர். ஜோலார்பேட்டை தொகுதியில் 1,943 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அதில், 1,767 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் தொகுதியில் 1,051 பேர் விண்ணப்பித் திருந்த நிலையில், 1,003 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் திருப்பத்தூர் மாவட் டத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மூலம் புதிதாக 6,083 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.
பெண் வாக்காளர்கள் அதிகம்
புதிய வாக்காளர் பட்டியலில் 6,083 பேர் இடம் பெற்ற பிறகு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 307 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.இதில், 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர். வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ள அனைவரும் ஏப்ரல் 6-ம் தேதி தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT