Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
காட்டுமன்னார்கோவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் ஆதரவு திரட்டினார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி திமுக கூட்டணி விடுதலைச்சிறுத்தைகள் கட்சிவேட்பாளர் சிந்தனைச் செல்வனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் முக்கிய பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள்,பல்வேறு தொழில் முனைவோர்களையும் பல்வேறு இயக்கங்கள்,பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்களையும் சந்தித்து ஆதவு திரட்டினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சிந்தனைச் செல்வன் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியை தொழில் நகரமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் வழியாக அரியலூருக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன், தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். தீயணைப்பு நிலையம் காட்டுமன்னார்கோவிலில் நிரந்தர இடம் அமைத்து தருவேன் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT