Published : 25 Mar 2021 03:16 AM
Last Updated : 25 Mar 2021 03:16 AM
வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், செய்தியாளர்கள் என மொத்தம் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சி, மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கரோனா தடுப்பூசி போடும் முகாம் வேலூர் வெங்கடேஸ்வரா மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசும்போது, "நாடு முழுவதும் கரோனா பரவல் 2-வது அலையை சந்தித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 0.5 சதவீதமாக இருந்த கரோனா பரவல் மார்ச் மாதம் 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கரோனா பரவலை தடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வெளியே சென்று வீட்டுக்குள் நுழைந்த உடன் கை, கால்கள், முகத்தை சுத்தமாக சோப்புப்போட்டு கழுவ வேண்டும்.
அச்சம் தேவையில்லை
வேலூர் மாநகராட்சியில் தினசரி 1,000 பேருக்கு தடுப் பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதுவரை முதல் நிலைப்பணியாளர்கள், செவி லியர்கள், காவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், உணவகங்களின் உரிமையாளர் மற்றம் ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களும் தடுப்பூசியை தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நகர் நல அலுவலர் சித்ரசேனா, ரோட்டரி சங்க நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT