Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
குறிஞ்சிப்பாடி தொகுதி திமுகவேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் கிராமப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேற்றுஅத்தொகுதிக்கு உட்பட்ட மேட்டுகுப்பம், கொளக்குடி, கருங்குழி, நைனார்குப்பம், உள்மருவாய், ஓணாங்குப்பம், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், ரெடிப்பாளையம், கல்குணம், பூதம்பாடி,குருவன்பேட்டை, வரதாராஜன்பேட்டை, மேலப் புதுப்பேட்டை ஆகிய ஊர்களில் கூட்டணிக் கட்சினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது பேசிய அவர், “இப்பகுதி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது முதல் ஆளாக நான் வந்து நின்றேன். கரோனா காலத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம், ஆனால் எதிர் அணியில் உள்ளவர்கள் யாரும் வரவில்லை. ஆனால் இப்போது வருகின்றனர். எங்கள் கூட்டணி கட்சியினர்தான் உதவிகளைச் செய்தனர். நாங்கள் நோட்டுக்காக சேர்ந்த கூட்டணி இல்லை, கொள்கைக்காக சேர்ந்த கூட்டணி. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை.திமுக வந்தால் மாற்றம் நிச்சயம்உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பூதம்பாடியில் ஆற்றுப் பாலம் கட்டி தரப்படும் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் செய்து தரப்படும்” என்றார்.
மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் வட்டார தலைவர் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கடலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப் பாளர் தாமரைச்செல்வன், திமுக.ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி மற்றும் திமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்து வாக்குகள் சேகரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT