Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
சட்டமன்ற தேர்தல் குறித்து மண்டல அலுவலர்களுடன் தேர்தல் சிறப்பு பொதுப்பார்வையாளர் அலோக் வரதன்.தலைமையில் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்கான முன்னேற்பாடு பணிகள், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து சிறப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மையம், மற்றும் மாவட்ட வாக்காளர் சேவை மையத்தை அவர் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை, காவல்துறை துணைத்தலைவர் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் .ஸ்ரேயா.பி.சிங், திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட வருவாய் அலுவலர் .சரஸ்வதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT