Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM
திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் பகுதியில் நேற்று வாகன தணிக் கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப் போது, அவரிடம் ரூ.97,500 இருந்துள்ளது. அவர், வரகூர் கிராமத்தில் வசிக்கும் தினகரன் என்பதும், அவர் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.97,500-ஐ பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT