Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

வேலூர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து - அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம் : மன்னிப்பு கோரியதால் பணிக்கு திரும்பினர்

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனை கண்டித்து, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பணியாளர் களிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வரும் ஆணையரை இடமாற்றம் செய்யக் கோரி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சி ஆணை யராக இருப்பவர் சங்கரன். இவர், பதவிக்கு வந்த பிறகு மாநகராட்சி பணியாளர்களிடம் தகாத முறையில் பேசி வருவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இதனை கண்டித்து, கரோனா ஊரடங்கு காலத்தில் மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சமாதானம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஆணையர் சங்கரன் மீண்டும் மாநகராட்சி பில் கலெக்டர், அலுவலக பணி யாளர்கள் உள்ளிட்டோரை ஒருமையில் அழைப்பதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆணையரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 150-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கூட்டமைப்பின் செயலாளர் பாலசந்திர குமார் கூறும்போது, ‘‘மாநகராட்சி ஆணையர் சங்கரன் பொறுப்பேற்ற பிறகு பணியாளர்களை மிகவும் தரக் குறைவாக நடத்துகிறார். அனை வரையும் ஒருமையில் பேசுவதுடன் அச்சில் ஏற்ற முடியாத வார்த் தைகளை பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் பயன்படுத்துகிறார். தேவை இல்லாமல் பணியாளர்களை காலை 8 மணிக்கு வரவழைத்து இரவு 9.30 மணி வரை பணியில் இருக்குமாறு கூறி வருகிறார்.

அவரது நடவடிக்கைகளால் அலுவலக உதவியாளர் மகேஷ், பில் கலெக்டர்கள் சதா சிவம், சுந்தர்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எனவே, பணியாளர் களிடம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

இந்த தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பின்னர், தமிழ்நாடு மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சீத்தாராமன் தலை மையில் ஆணையர் சங்கரனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், சமாதானம் ஏற்பட்டதால் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த பேச்சுவார்த்தை தொடர் பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சீத்தாராமன் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள் ளிருப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த மாநகராட்சி ஆணையர் பகிரங்க மன்னிப்பு கோரினார். இனிமேல், இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அவரை இட மாற்றம் செய்ய வேண்டும் என அரசுத்துறை செயலாளர் வரை புகார் கடிதம் கொடுத்துள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் பணியில் மட்டும் பணியாளர்கள் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x