Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

ஒட்டுமொத்தமாக மதுபானங்களை விற்றால் - டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடவடிக்கை : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்தால் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுபானம் விற்பனையை முறைப்படுத்து வற்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, மதுபான விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பணியாளர்கள் எக்காரணத்தை கொண்டும் மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது.

அதேபோல, தேர்தல் தேதி நெருங்கி வருவதால் வழக்கமான விற்பனையை காட்டிலும் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகும் மதுபானக் கடைகளின் விவரத்தை மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பிறப்பிக்கப்பட்ட விதிமுறை களுடன் மதுபானங்களை விற் பனை செய்ய வேண்டும். மது பானம் வாங்க வருவோர் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்களை வாங்கிச்செல்ல அறிவுறுத்த வேண்டும்.

ஒரே நபர் தொடர்ந்து மது பானங்களை வாங்குவது தெரிய வந்தால் அவர்களை குறித்த தகவல்களையும் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தெரியப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி ஒரே நபருக்கு கூடுதலாக மது பானம் விற்பதோ, ஒட்டு மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்வதோ தெரியவந்தால் கண்காணிப்பாளர் மற்றும் விற் பனையாளர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்’’. என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x