Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 9 பார்வையாளர்கள் நியமனம் : புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள், மின்னஞ்சல் முகவரி வெளியீடு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் தேர்தல் பொது பார்வை யாளர், தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக அருண் கிஷோர் டோங்க்ரே நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை பயணியர் மாளிகை அறை எண் – 4-ல் முகாம் அலுவலகம் உள்ளது. தொலைபேசி எண் – 04175 – 292950 மற்றும் செல்போன் எண் – 93600 86886, மின்னஞ்சல் முகவரி ak47dongre@gmail.com.

கீழ்பென்னாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வை யாளராக விஜய்குமார் மன்டிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மலை நகரம் வேட்டவலம் சாலையில் பொதுப்பணித் துறை பயணியர் மாளிகையில் அறை எண் – 3-ல் முகாம் அலுவலகம் உள்ளது. தொலைபேசி எண் – 04175–221950 மற்றும் செல்போன் எண்–78100 67533. மின்னஞ்சல் முகவரி–mantrivijaykumar@gmail.com.

போளூர் மற்றும் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரணி பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் அறை எண் – 1-ல் முகாம் அலுவலகம் செயல் படுகிறது. தொலைபேசி எண் – 04173 – 290957 மற்றும் செல்போன் எண் – 78100 38612. மின்னஞ்சல் முகவரி – contactbstdc@gmail.com

செய்யாறு மற்றும் வந்தவாசி (தனி) தொகுதியில் தேர்தல் பொது பார்வையாளராக கம்லேஷ்வர் பிரசாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வந்தவாசி நகரம் ஆரணி சாலையில் நெடுஞ்சாலை துறை பயணியர் மாளிகை அறை எண் – 1-ல் முகாம் அலுவலகம் அமைந் துள்ளது. செல்போன் எண் – 70106 26594. மின்னஞ்சல் முகவரி – singhkamleshwarprasad@gmail.com

தேர்தல் செலவின பார்வையாளர்

திருவண்ணாமலை மற்றும் செங்கம் (தனி) தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக கிரிஷ் பரிகார் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை நகரம் வேட்ட வலம் சாலையில் பொதுப்பணித் துறை பயணியர் மாளிகையில் அறை எண் – 5-ல் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. தொலைபேசி எண் – 04175 253950. செல்போன் எண் – 88382 11803. மின்னஞ்சல் முகவரி – girishparihar2014@gmail.com

கீழ்பென்னாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக ராகுல் மகதோ நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை பொதுப்பணித் துறை பயணியர் மாளிகையில் அறை எண் – 7-ல் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. தொலைபேசி எண் – 04175 – 220950. செல்போன் எண் – 93454 65186. மின்னஞ்சல் முகவரி – eokprkpm21@gmail.com

போளூர் மற்றும் ஆரணி தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக துர்கேஷ் குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஆரணி பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் அறை எண் – 2-ல் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. தொலைபேசி எண் – 04173 290958. செல்போன் எண் – 88383 62753. மின்னஞ்சல் முகவரி – durgesh.k.shukla@incometax.gov.in

செய்யாறு மற்றும் வந்தவாசி (தனி) தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சந்தீப் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் அறை எண் – 1-ல் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. தொலைபேசி எண் – 04182 – 220382. செல்போன் எண் – 93454 02045. மின்னஞ்சல் முகவரி – irssandeep@gmail.com

தேர்தல் காவல் பார்வையாளர்

8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு தேர்தல் காவல் பார்வையாளராக அஜய்குமார் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். திரு வண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை பொதுப்பணித் துறை பயணியர் மாளிகையில் அறை எண் – 1-ல் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. தொலைபேசி எண் – 04175 - 229950. செல்போன் எண் – 93442 19700. மின்னஞ்சல் முகவரி - ajay.premiere@gmail.com மற்றும் acp-admin-ahd@gujarat.gov.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x