Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வுக்கான எல்இடி திரை கொண்ட வாகனங்களை ஆட்சியர் சிவன் அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வுக்காக எல்இடி திரை வாயிலாக விழிப்புணர்வு படக்காட்சிகளை ஒளிபரப்ப இந்த வாகனத்தை பயன்படுத்த உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சி பகுதிகளில் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை இந்த வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்த வாகனங்களை ஆட்சியர் சிவன் அருள் நேற்று கொடியைசத்து தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT