Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் :

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளராக குமாரபாளையம் தனியார் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஓம் சரவணா இருந்தார். அவர் தனக்கு கட்சித் தலைமை சீட் வழங்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதனால் அவரை கட்சித் தலைமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, குமாரபாளையம் தொகுதி மக்களுக்கு நன்மைகள் செய்ய சுயேச்சையாக போட்டியிடுகிறேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x