Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM
திருவண்ணாமலை மாவட்டம் ஜமனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் (28). இவர், கடந்த 2019-ம் ஆண்டு கேரளாவில்இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சவுந்திரராஜன் கொண்டு வந்த உடமைகளை சோதனையிட்டனர்.
அதில், 15 கிலோ எடையுள்ள சந்தனமரம் இருப்பதும், இவர் கேரளாவில் இருந்து ரயில் மூலம் சந்தனமரங்களை கடத்தி விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருப்பத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில், ரயிலில் சந்தன மரத்தை கடத்தி வந்த சவுந்திரராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,500 அபராதமும் விதித்து நீதிபதி விஜய்ராஜேஷ் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT