Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM

நெல்லை மாவட்டத்தில் இதுவரை - 5 தொகுதிகளுக்கும் 55 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் : பொதுப் பார்வையாளர்கள் 4 பேர் விரைவில் வருகை

திருநெல்வேலி

``திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், இதுவரை 55 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக பொதுப்பார்வையாளர்கள் 4 பேர் வரவுள்ளனர்” என, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத் திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படை குழுவினர், 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். இந்த குழுவினர் சோதனை மேற்கொண்டதில், முறையான ஆவணங்கள் இல்லாத ரூ. 60,73,473 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில் சி-விஜில் செயலி மூலம் வரப்பெற்ற 15 புகார்கள், ஹெல்ப் லைன் மூலம் வரப்பெற்ற 1,301 புகார்கள், தொலைபேசி மூலம் வரப்பெற்ற 19 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 4 பொதுப்பார்வை யாளர்கள் வரவுள்ளனர். அதன்படி, திருநெல்வேலி தொகுதிக்கு டாக்டர் சுப்ரதா குப்தா, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை தொகுதி களுக்கு சுரேந்திர நாராயண பாண்டே, நாங்குநேரி தொகுதிக்கு டாக்டர் நூன்சபாத் திருமலநாயக், ராதாபுரம் தொகுதிக்கு அல்கேஸ் புரோசத் ராய் ஆகியோர் தேர்தல் பொதுப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல், மாவட்டத்தில் தேர்தல் கணக்கு பார்வையாளர் களாக திருநெல்வேலி, பாளையங் கோட்டை தொகுதிகளுக்கு சுபோத்சிங், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் தொகுதி களுக்கு ராஜேஸ் திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணி காவல் பார்வையாளராக சுதன்ஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

55 வேட்புமனுக்கள்

தேர்தல் பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு சட்டப் பேரவை தொகுதி வாரியாக தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 9,236 தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இதுவரை 55 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்தில் பணிகள் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு சானிடைஸர், முகக்கவசம் மற்றும் மருந்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்பு ணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 80 வயதுக்கு அதிகமான வாக்காளர்கள் 36,689 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள் ளது. இவர்களில் 3,102 பேர் தபால் வாக்குகளுக்கான படிவம் 12-டி பெற்றுள்ளனர். அந்த படிவம் பரிந்துரை செய்யப்பட்டு வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு, துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஸ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x