Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 13, 14-ம் தேதி விடுமுறைக்குப்பின் 15-ம் தேதி முதல் மனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்தமுள்ள 22 தொகுதிகளிலும் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
நாளை (20-ம் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 22-ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் களத்தில் எத்தனைபேர் உள்ளனர் என்பது அன்று மாலையில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT