Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

தேர்தல் தொடர்பான புகார்களைக் கண்காணிக்க - ஈரோட்டில் 8 தொகுதிகளுக்கும் கூடுதலாக கண்காணிப்பு குழு நியமனம் :

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக் குழு, மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் பேசினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தலா 3 பறக்கும்படை குழுக்களும், தலா ஒரு நிலையான கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதிக்கும் மேலும் ஒரு நிலையான கண்காணிப்புக் குழு வீதம், 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கான பயிற்சி மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியினர் 9791744425 என்ற எண்ணிலும், ஈரோடு மேற்கு தொகுதியினர் 9791755568, மொடக்குறிச்சி 9791799934, பெருந்துறை 9791766629, பவானி 9791736661, அந்தியூர் 9791706668, கோபி தொகுதியினர் 9791796663, பவானிசாகர் தொகுதியினர் 9791725557 என்ற எண்களில் பறக்கும்படை குழுவினரைத் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x