Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி கோலமிட்டும், மாணவிகள் தங்கள் கைகளில் மெகந்தி பூசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிலம்பாட்டம், கரகாட்டம் மூலமும், மனித பிரமிடு அமைத்தும், விடுதலை போராட்ட வீரர்கள் வேடமணிந்து மனிதச்சங்கிலி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வை யிட்டார். முன்னதாக, ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியையும் ஆட்சியர் பார்வையிட்டார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் விஜயலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் சிவக் குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகரன், மாணவ, மாணவியர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT