Published : 16 Mar 2021 03:14 AM
Last Updated : 16 Mar 2021 03:14 AM

அரியமங்கலத்தில் ரவுடி கொலை :

திருச்சி

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிலம்பரசன்(34). பிரபல ரவுடி. குடும்ப முன்விரோதம் காரணமாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் கயல்விழியின் கணவரும், தனது சித்தப்பாவுமான சேகரை வெட்டிக் கொலை செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் இருந்த சிலம்பரசனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியபடியே வீட்டிலிருந்து நடந்து சென்ற அவர், சுமார் 300 மீ தூரத்திலுள்ள முட்புதரை ஒட்டிய பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சிலம் பரசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. அலறல் சத்தம்கேட்டு அவரது குடும்பத் தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, உடலில் படுகாயங்களுடன் சிலம்பரசன் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த அரியமங்கலம் போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x