Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் உள்ள 22 தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக வேட்பா ளர்கள் உட்பட 53 பேர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், அமமுக வேட்பாளர் மனோகர் உட்பட 3 பேர், ரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.குமார் உட்பட 2 பேர், திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் உட்பட 2 பேர், மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி உட்பட 2 பேர், மணப்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ சந்திரசேகர் உட்பட 3 பேர், துறையூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தி, திமுக வேட்பாளர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் உட்பட 4 பேர், முசிறி, லால்குடி தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர் என மாவட்டத்தில் நேற்று மட்டும் 19 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை தொகுதியில் ஒரு சுயேச்சை, திருமயம் தொகுதி யில் அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து, அமமுக வேட்பாளர் எஸ்.முனிராஜ், விராலிமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் உட்பட 2 பேர், கந்தர்வக்கோட்டை தொகுதியில் ஒருவர், ஆலங்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் டி.விடங்கன் என மொத்தம் 7 பேர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அறந்தாங்கி தொகுதியில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக வேட்பாளர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி உட்பட 13 பேர், குளித்தலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சந்திரசேகர் உட்பட 2 பேர், அரவக்குறிச்சி தொகுதியில் அமமுக வேட் பாளர் பிஎஸ்என்.தங்கவேல், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற என்.முத்துக்குமார் என மாவட்டத்தில் 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் பிரபாகரன் உட்பட 3 பேர், குன்னம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் என மாவட்டத்தில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அரியலூர் தொகுதியில் அதிமுக வேட்பளராக அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அமமுக வேட்பாளர் துரை.மணிவேல் உட்பட 4 பேர், ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு உட்பட 2 பேர் என 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT