Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM
நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்துவது தமிழக மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்றிரவு அவர் அளித்த பேட்டி: பாஜக தலைமை யிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அதை நர்சிங் படிப்புகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. இது, தமிழக மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற முடியாது.
அதேபோல செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.22 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் யாரும் பேசாத சமஸ் கிருதத்துக்கு ரூ.635 கோடியை செலவிட்டுள்ளது. எனினும், பாஜகவினர் தமிழ் வேடமிட்டுக் கொண்டு பாரதியார், ஒளவையார், திருவள்ளுவரின் பாடல்களை மட்டும் கூறி மக்களை ஏமாற்று கின்றனர். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இது தொடர்ந்தால் தமிழகத்துக்கு மிகப்பெரும் ஆபத்து. எனவே பாஜக- அதிமுக கூட்டணி படுதோல்வி அடைய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT