Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தொகுதி தேர்தல்நடத்தும் அலுவலர் ஜி. கண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருடன் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் மகபூப்ஜான் உடனிருந்தனர்.
அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீக் தயாளிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப் பேரவை முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் வேல்துரை ஆகியோர் உடனிருந்தனர். இதுபோல் அம்பாசமுத்திரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செண்பகவள்ளி மனுத் தாக்கல் செய்தார்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தைசாமியிடம் மனுத் தாக்கல் செய்தார்.
ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.எஸ். இன்பதுரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் மனு தாக்கல் செய்தார். அதிமுக அமைப்பு செயலாளர் சீனிவாசன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபோல் இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயபாலன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மட்டுமின்றி நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT