Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

திருவெறும்பூரில் ப.குமார்- மகேஷ் பொய்யாமொழி நேரடி மோதல் - 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றுவோம்- அதிமுக ஆளும்கட்சியை விட சிறப்பாக ‘செய்வோம்’- திமுக : போட்டாபோட்டியால் தொண்டர்கள் உற்சாகம்

திருச்சி

அதிமுக, திமுக மாவட்டச் செயலா ளர்களின் நேரடிப் போட்டியால் திருவெறும்பூர் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தொழிற் சாலைகள் மிகுந்த பகுதியாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி விளங்குகிறது. நகர்ப் புறமும், ஊரக பகுதிகளும் கலந்து காணப்படும் இத்தொகு தியில் 1,43,229 ஆண்கள், 1,48,609 பெண்கள், 53 திருநங்கைகள் என 2,91,891 வாக்காளர்கள் உள்ளனர்.

மீண்டும் மகேஷ் பொய்யாமொழி

கடந்த தேர்தலில் இங்கு திமுக வேட்பாளராக நின்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றார். அதன்பின் இத்தொகுதியை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார்.

இந்த தேர்தலில் அவர் மீண்டும் திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார்.

இதையடுத்து மீண்டும் வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைக்கும் நோக்கில் ஊர், ஊராகச் சென்று, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் பணியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

30 ஆண்டு கால வரலாறு

இந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் இருமுறை திருச்சி எம்.பி.யாக இருந்தவரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் போட்டியிடுகிறார். கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர், கடந்த 30 ஆண்டுகளில் ஒருமுறைகூட அதிமுக இங்கு நேரடியாக வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்றார். எனவே, இந்த 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றும் வகையில், இம்முறை இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றுக் காட்டு வோம் எனக்கூறி ப.குமார் தரப் பினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் தொகுதி

அதிமுக, திமுக வேட்பாளர் கள் இருவருமே அவர்களது கட்சி யின் மாவட்டச் செயலாளர்கள் என்பதாலும், மக்கள் பிரதிநிதிக ளாக இருந்தவர்கள் என்பதாலும், இம்மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும் இங்கு தான் வெற்றிக்கு கடும் போட்டி நிலவுவதாக அரசியல் பார்வை யாளர்கள் கருதுகின்றனர்.

எனவே ஆளுங்கட்சியினரிடத் தில் தாராள பணப்புழக்கம் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், பொன்மலை பகுதியில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்தலில் ஆளும்கட்சியினர் எடுக்கும் ‘ஆயுதத்துக்கு’ நாமும் சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைவிட நாம் சிறப்பாக ‘செய்வோம்’ என்றார். இதனால் அதிமுகவினரைப் போல, திமுக வினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுஒருபுறமிருக்க மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரான அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர்(அமைப்பு) முருகா னந்தம் மற்றும் அக்கட்சியினரும் இத்தொகுதியில் தேர்தல் பணி களை முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால் திருவெறும்பூர் அரசி யல் களம் சூடுபிடிக்கத் தொடங் கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x