Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM
வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
ஈரோடு ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சி.கதிரவன் தலைமை வகித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2,741 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் புதிய வாக்காளர்களுக்கு அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. வாக்காளர் பெயர், தந்தை பெயர், தொகுதி போன்ற விவரங்களை பதிவு செய்தால் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என அறிவுறுத்தப்பட்டடது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT