Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

மோடி, அதிமுக மீதுள்ள வெறுப்பு திமுகவுக்கு சாதகம் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்து

விழுப்புரம்

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அயராது பாடுபடும். சேராத கூட்டணியில் சேர்ந்து இன்று அதிமுக விழிபிதுங்கி நிற்கிறது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மோடி, அதிமுக மீதுள்ள வெறுப்புகள் திமுகவிற்கு வாக்குகளாக பதிவாகும். மதவாதத் துடன் கூட்டணி சேருவதை நிறுத்திக்கொண்டால் அதிமு கவிற்கு எதிர்காலம் இருக்கும். இல்லையெனில் அதிமுக காணாமல் போய்விடும்.தமிழ கத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம், அதுதான் எங்களது கொள்கை என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x