Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்ட 72 புகார் மீது பறக்கும் படை நடவடிக்கை : நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கா.மெகராஜ் பேசினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொண்டதன் காரணமாக கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கடந்த 12-ம் தேதி வரை ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 80 ரொக்கம் மற்றும் ரூ.12 ஆயிரத்து 750 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதில், உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில் ரூ.20 லட்சத்து 72 ஆயிரத்து 280 தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மேலும் சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்ட 72 புகார் மீது பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 1800-425-7021 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு 9 புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

கூட்டத்தில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேவ் பிரகாஷ் பாமநாவத், அஜய் சிங், மன்தீப் சிங் பார்மர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x