Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப் பதற்கான தகவல் மையத்தை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வே.விஷ்ணு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
மாற்றுத் திறன் வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக 7598000251 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காது கேளாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை மேற்குறிப்பிட்ட எண்ணில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தொடர்புகொண்டு சைகைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணிகளையும் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT