Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேர வைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம் மற்றும் கட்டுப்பாட்டு மையம், ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அறை மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பார்வையாளர் நிமத்ஷெரிங் ஷெர்பா நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தேர்தல் தொடர்பான நடத்தை விதி முறைகள் மீறல்கள் தொடர் பான புகார்கள் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.
ஆட்சியர் த.ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மெரினா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் இ.பொம்மி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT