Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM
திருச்சி- தஞ்சாவூர் சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உதவியுடன் திறக்கப்பட்ட புதிய லாரி புக்கிங் அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் சிஐடியுவினர் 8 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து அந்த அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மரக்கடை மேம்பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் தர், சிஐடியு நிர்வாகிகள் ஜெயபால், ராஜேந்திரன், செல்வி, மணிமாறன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT