Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

தபால் வாக்கு படிவம் விநியோகம் :

தென்காசி

தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் கூறியிருப்பதாவது: 80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்அஞ்சல் மூலம் வாக்களிக்க சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பபடிவம் 12 டி-ஐ வீடுகளுக்கேவந்து விநியோகம் செய்கின்றனர்.தபால் வாக்கு அளிக்க விரும்பும்வாக்காளர்கள் தங்களது விருப்பத்தை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவித்து படிவம் 12 டி-ஐ பெற்று பூர்த்தி செய்துஒப்படைக்க வேண்டும். அதன்பின் தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குப்பதிவு குழுவைதபால் வாக்கு கோரி விண்ணப்பம் செய்த நபர்களின் வீடுகளுக்குஅனுப்பி அவர்களை வாக்களிக்க செய்வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x