Published : 08 Mar 2021 03:58 AM
Last Updated : 08 Mar 2021 03:58 AM

தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது : ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் செ.பால் ராஜ், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும், குரல் பதிவும் அனுப்பியுள்ளார்கள். தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் செயல்முறை ஆணையில் கரோனா தடுப்பூசி விருப்பமுள்ளவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளலாம் என்றும், கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x