Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
தேசிய தொழிற்சான்றிதழ் தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. சான்றிதழ் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம், என ஈரோடு மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வரும் ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் தேசிய தொழிற்சான்றிதழ் பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவிர, கூட்டு தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. இதுதொடர்பான மேலும் விவரம் அறியவும், விண்ணப்ப படிவமும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்துச்சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து வரும் 15-ம் தேதிக்குள் ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT