Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

ஈவெரா கல்லூரி மாணவர்கள் 21 பேர் காத்திருப்பு போராட்டம் :

திருச்சி

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளநிலை ஆங்கிலம் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கடந்த டிசம்பரில் 5-ம் பருவத் தேர்வுகளை ஆன்-லைனில் எழுதினர். இதற்கான முடிவுகள் பிப்.19-ம் தேதி வெளியாகிய நிலையில், 21 பேருக்கு ஆப்சென்ட் அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த 21 பேரும் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதற்கு, விடைத்தாள்கள் பதிவேற்றம் செய் யப்படாததால் ஆப்சென்ட் அளிக்கப்பட்டதாக பதில் அளித்தனர். ஆனால், மாணவர்களோ, விடைத் தாள்களை பதிவேற்றம் செய்ததுடன், அவற்றை அஞ்சல் மூலம் கல்லூரிக்கும் அனுப்பிவிட்டதாகவும் கூறி, அவற்றுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாணவர்கள் 21 பேரும் நேற்று கல்லூரி வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கல்லூரி தேர்வு நெறியாளர் கே.வாசுதேவன், துறைத் தலைவர்கள் வெ.சங்கரநாராயணன், சேதுராமன், ஹேமா நளினி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x