Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
கடலூரில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்கினை தவறாமல் பதிவுசெய்து 100 சதவீத வாக்குப்பதிவினை கொண்டு வர வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு படக்காட்சி வீடியோ வாகனத்தை கடலூர்பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிநேற்று தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டு, வாக்காளர் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரி வித்ததாவது:
வாக்காளர்கள் தங்கள் வாக் கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாவிட்டால் தபால் மூலமாக வாக்களிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுஉள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம், எந்தவொரு வாக்காளர்களும் விடுபடக்கூடாது என்பதேதேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். மாவட்டத்தில் தேர்தல்வேலைகளை கண்காணிக்க 22சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும் 27 பறக்கும் படைகள், 27 நிலையான குழுக்கள், 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 9 கணக்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டும் கண்காணிக் கப்பட்டு வருகிறது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 58 லட்சம் ரொக்கமும், ரூ.31 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT