Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
தமிழக – கர்நாடக மாநில எல்லையில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று, கர்நாடக காவல்துறையினரையும் பாதுகாப்புப் பணிக்கு அழைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என எஸ்பி தங்கதுரை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஈரோடு எஸ்பி தங்கதுரை கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, உரிமம் பெற்று துப்பாக்கி படைக்கலன் வைத்திருப்போர், அந்தந்த காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 1,447 துப்பாக்கிகள் உள்ளன. இவை அனைத்தும் போலீஸாரால் பெறப்பட்டுள்ளன. இதில் வங்கி பணம், நகை, பாதுகாப்புக்காக 58 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு பதிவுக்காக 939 இடங்களில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு 939 போலீஸார் பணியில் அமர்த்தப்படுவார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 3,500 பேர் தேவைப்படுகிறார்கள். இதில் போலீஸ் அல்லாத 1, 500 பேர் அவசியமான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழக – கர்நாடக மாநில எல்லை பகுதிகளில் வாக்குப்பதிவு தின பாதுகாப்புக்கு கர்நாடக மாநில போலீஸார் வரவழைக்கப்படுவார்கள். பர்கூர், தாளவாடி, எல்லக்கட்டை, புளிஞ்சூரில் தேர்தலுக்காக மதுவிலக்கு சோதனைச் சாவடி அமைக்க ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளோம். மாவட்டத்தில் 873 ரவுடிகள் உள்ளனர். இவர்களில் 90 பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்களின் நடவடிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT